சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சியினர் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுநல்லூரில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். மேலும் இவர் தேவகோட்டை தெற்கு வட்டார தலைவராக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் அதிமுக பிரமுகர் பாண்டியன் என்பவருக்கும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தலன்று அதே பகுதியை சேர்ந்த வைரவன் […]
