பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு நடத்தப்படும் இருவிரல் பரிசோதனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள கருத்து என்னவென்றால், இருவிரல் பரிசோதனை என்பது பெண்களின் பாலுறப்புக்குள் இரண்டு விரல்களை விட்டு கன்னித்திரை கிழியாமல் இருக்கிறதா என்பதனை சோதனை செய்யும் முறையாகும். இந்த பரிசோதனை முறை இன்றும் நடைமுறையில் இருப்பது என்பது ஆணாதிக்கம் மனோபாவம் கொண்டது. இதில் எந்த ஒரு அறிவியல் தன்மையும் கிடையாது. எனவே இந்த பரிசோதனைக்கு தடை விதிக்கப்படுகிறது. […]
