டிராக்டரின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் வசிக்கும் காட்டு ராஜா மற்றும் சிவா என்பவருடன் டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றுவதற்காக வாசுதேவநல்லூர் பகுதி சென்றுகொண்டிருந்தனர். […]
