மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய பணியாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை விடுவிக்க வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருபகுதியாக மியான்மரில் மாண்டலே என்னும் நகரில் உள்ள […]
