இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சீக்கராஜபுரம் பகுதியில் மணிகண்டன் மற்றும் சரவணன் என்ற 2 நபர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் சீக்கராஜபுரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருவலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவலம் சாலையில் இருந்து ஐயப்பன் என்பவர் சீக்கராஜபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவலம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது […]
