லாரி ஓட்டுநரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்தோம் என்று கைதான 2 வாலிபர்கள் காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகில் குருராஜபாளையத்தில் வசித்து வந்தவர் லாரி டிரைவர் பூபாலன் (40). இவர் மீது பைக்குகள் திருடியதாக வேப்பங்குளம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து பூபாலன் கடந்த ஆறு மாதங்களாக வேலூரை அடுத்துள்ள அப்துல்லா புரத்தில் […]
