கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விளைப் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல்வலு பயிற்சியாளராக இருக்கிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இரும்பு மனிதன் போட்டியில் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் ஒரு கனரக வாகனத்தை கயிறு மூலம் 40 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு உலக சாதனையை கண்ணன் படைத்துள்ளார். […]
