தந்தையை இரும்புக் குழாயால் அடித்து கொலை செய்த 2 மகன்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள நெடுங்கூர் அண்ணாமலை நகரில் விவசாயி சுப்பிரமணி வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், அரவிந்த்குமார், வினோத்குமார் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இவர்களில் சுப்பிரமணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண்ணிற்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சுப்பிரமணி- சாந்தி இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக சுப்பிரமணி மனைவி சாந்தியை […]
