Categories
அரசியல்

“எப்போதும் எங்க கொள்கை இதுதான்”…. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டி….!!!!

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம், அதிமுகவை பொருத்தவரை எப்போதும் இருமொழிக் கொள்கைதான் என்று கூறியுள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த ஆர்.வைத்திலிங்கம், “தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என்பது ஜெயலலிதா காலத்திலும், எம்ஜிஆர் காலத்திலும், அண்ணா காலத்திலும் பின்பற்றப்படுகிறது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்தும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை தான். எங்களது தலைமை புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து, அதன் கருத்துக்களை சொல்லும்” என்று ஆர்.வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இந்தி, ஆங்கிலம் மட்டும் ஏன்? – டிடிவி தினகரன் கண்டனம்…!!

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தமிழக பள்ளிக் கல்வித் துறை வழியாக நடத்தப்பட்ட புதிர் போட்டியில் தமிழை தவிர்த்துவிட்டு ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்விகள் கேட்கப் பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வழியாக நடத்தப்பட்ட தமிழக மாணவர்களுக்கான புதிர் போட்டியில் தமிழை […]

Categories
மாநில செய்திகள்

கோரிக்கை வைக்க உரிமை உண்டு…. நன்றி சொல்கிறேன்… முதல்வரை பாராட்டிய வைரமுத்து ..!!

முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருமொழி கல்வி கொள்கை செயல்படும் என அறிவித்ததற்கு வைரமுத்து தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பல அரசியல் கட்சியினர்  கூறி வரும் நிலையில், இன்று ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிறகு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மும்மொழி கொள்கையை செயல்படுத்த முடியாது என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமிழகத்தில் எப்போதுமே இருமொழி கொள்கையே தொடர்ச்சியாக இருக்கும் என […]

Categories

Tech |