கோவில் விழாவின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் 12 பேர் காயமடைந்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் வாலாந்தூரில் அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 ஆம் நாளான நேற்று முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்தது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டார்கள். இதில் 12 பேர் படுகாயம் அடைந்ததால் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள். பின் படுதாயம் அடைந்த மலர்விழி, சங்கிலி, […]
