தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் தென்னை மரத்தில் மோதி நடைபெற்ற விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள ஓடைப்பட்டியில் விக்னேஷ்(32), முருகன்(45), சென்னையன்(48) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சீலநாயக்கன்பட்டியில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் ஒரு இருசக்கர வாகனம் மூலம் 3 பேரும் ஓடைப்பட்டிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கண்டமனூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]
