இருசக்கரவாகனம் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியில் கல்யாணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களை சந்தித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது கேணிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்தகாயமடைண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த கல்யாணகுமாரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு ராமநாதபுரம் […]
