இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள விவேகானந்தபுரம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரஞ்சனி(22) ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள ரஞ்சனி தினமும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று காலையில் ரஞ்சனி இருசக்கர வாகனத்தில் […]
