இருசக்கர வாகனம் மீது கார் மோதி நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் தெருவில் பால் வியாபாரியான கர்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் தனது நண்பரான கண்ணன் என்பவரும் சேர்ந்து கழுதைமேடுபுலம் பகுதியிலிருக்கும் கண்ணனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து இருசக்கர வாகனம் மூலமாக இருவரும் கூடலூருக்கு கொண்டிருந்துள்ளனர் அப்போது கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]
