போர்களை வெல்லும் வகையில் எலைட் படைகளை உருவாக்குவதற்கு சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டிருக்கிறார். இந்திய எல்லையில் தொடர்ச்சியாக சண்டையிட்டு வரும் சீனா தற்போது புது படையை அமைக்க திட்டமிட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 லட்சம் ராணுவ வீரர்களை உள்ளடக்கியிருக்கும் சீனாவின் படைத்தளபதியாக ஜி ஜின்பிங் உள்ளார். இந்நிலையில், அவர் ராணுவத்திற்கு இவ்வாறு புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது, இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. அதாவது அதிபர் ஜி ஜின்பிங், அதிநவீன முறையில் போர் பயிற்சி, தொழில்நுட்பங்களுக்கு […]
