இராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரின் மனைவி மற்றும் தாயை கொடூரமாக கொன்றுவிட்டு நகையை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகேயுள்ள முடுக்கூரணியை சேர்ந்தவர் இராணுவ வீரர் ஸ்டீபன். இவர் தற்போது லடாக் எல்லையில் நாட்டிற்காகக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை ஸ்டீபன் வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். பின்னர் ஸ்டீபனின் தாய் ராஜகுமாரி மற்றும் மனைவி சினேகாவை கொள்ளையர்கள் தலையணையை வைத்து அமுக்கி, கம்பியால் […]
