பெரு நாட்டில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பெரு நாடும் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டிலுள்ள இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதித்துள்ளது. இருந்தாலும் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற இரவு நேர விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதனால் கொரோனாவின் […]
