தமிழகத்தில் இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும் சில இடங்களில் காவல்துறை அதிகாரிகள், போலீசார் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் […]
