பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் தேசிய கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நமது தேசிய கொடியை சூரிய உதயத்திலிருந்து பறக்கவிட்டு சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக இறக்கி விட வேண்டும் இதுதான் நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாமல், இரவு நேரத்திலும் பறக்கவிடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசிய கொடிக்கும், பாலிஸ்டர் தேசியக்கொடிக்கும் […]
