கனடா பாதுகாப்பை கருத்தில்கொண்டு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை 55 வயதிற்கும் குறைவானவர்களுக்கு செலுத்த இடைக்கால தடை விதித்துள்ளது. கனடாவில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சினைகள் ஏற்பட்டதால் தேசிய ஆலோசனை குழுவான NACI தற்காலிகமாக தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட் கிழமையில் கனடாவில் உள்ள மாகாணங்கள் அஸ்ட்ராஜெனகாவிற்கு தற்காலிக தடை அறிவித்துள்ளன. இதுகுறித்து NACI தெரிவித்துள்ளதாவது, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் செலுத்தப்பட்ட போது அரிய வகையான இரத்த உறைவினால் சிலர் […]
