பாகிஸ்தானில் மின்தடை குறித்து மத வழிபாட்டு தலத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் மின் தடை ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாகி மார்வட் மாவட்டத்தில் இசக் ஹெல் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது . இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று வழிபாடு நடைபெற்றுள்ளது. […]
