தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில் அண்மையில் படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் அவர்கள் […]
