நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி ஏற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களின் மாறக்கூடிய அகவிலைப்படி மாதத்திற்கு 105 ரூபாயிலிருந்து 210 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றரை கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்றும், இந்த புதிய அகவிலைப்படி […]
