உத்தரப்பிரதேசத்தில் நிலாவைப் பார்க்க ஆசைப்படுவதாக கூறி 25 வது மாடியிலிருந்து சிறுவர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சென்னையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்யநாராயணன், சூரியநாராயணன் எனும் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த சிறுவர்கள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிறுவர்கள் இருவரும் வீட்டின் பால்கனிக்கு சென்று நிலாவை பார்க்கவேண்டும் என்று தாயிடம் கூறியுள்ளனர். […]
