பிரிட்டனில் அடைக்கப்பட்டிருந்த குடியிருப்பினுள், இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள லங்காஷைர் பகுதியிலிருக்கும் Higher Walton என்னும் கிராமத்தின் Cann Bridge வீதியிலிருந்து, நேற்று மதியம் சுமார் 1:40 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில், அப்பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் வசித்த இரண்டு நபர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். எனவே, சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த குடியிருப்பின் கதவை தட்டி பார்த்தனர். உள்ளிருந்து, எந்த சத்தமும் […]
