திண்டுக்கல் மாவட்டம் ஓம் சாந்தி மேல்நிலைப் பள்ளியில் இயற்கை விவசாய திருவிழாவானது நேற்று துவங்கியது. இதனை முன்னிட்டு இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், சிறுதானிய உணவுவகைகள், மரச்செக்கு எண்ணெய், மாட்டு சாணத்தில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்கு, ரசாயனம் இல்லாத சாம்பிராணி, பனை ஓலை கூடை மற்றும் அலங்கார பொருட்கள், நாட்டு மாட்டு நெய், ஆயுர்வேத மருந்துகள் ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு உரிய இடுப்பொருட்கள், பாரம்பரிய […]
