IPCC வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தென்னிந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு பெரிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக பல இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இதை விரைவாக தடுத்து நிறுத்தாவிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் நாம் வாழும் பூமியில் இருக்காது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் WHO மற்றும் UNEP ஆகியவற்றால் பருவநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகளுக்கு இடையில் குழு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. […]
