இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி தொடர்பாக மாதிரி ஒத்திகை பயிற்சியானது கலெக்டர் முன்னிலையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை, பேரிடர் தணிக்கும் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை போன்றவை சார்பாக சர்வதேச பேரிடர் துயர் துடைப்பு நாளை முன்னிட்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி மற்றும் விழிப்புணர்வு குறித்து பணியாளர்கள் மாதிரி ஒத்திகை பயிற்சி செயல்விளக்கத்தை செய்து காண்பித்தனர். அதற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார். […]
