நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திக் உடன் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் திரை உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, சூதுகவ்வும், நானும் ரவுடிதான், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை பதித்தவர். மேலும் ரஜினி, விஜய் என பல நடிகர்களின் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். […]
