தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘டான்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு அனுதீப் இயக்கத்தில் தயாராக இருக்கும் SK20 என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது 22-வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் 51-வது படமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் […]
