அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி சுற்றில் அர்ஜென்டினா அணி யானது வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியை சேர்ந்த மெஸ்சிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் தன் சமூகவலைதளப்பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் “சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டுமாக மெஸ்சியின் வாயிலாக புதியதாக புரிந்துகொண்டேன். மெஸ்சி அர்ஜென்டைனாவுக்கு மட்டுமின்றி இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர். பந்திற்கும் அவரின் காலுக்கும் இடையில் […]
