தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 81 வயது ஆகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக பாரதிராஜா தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி போன்ற பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]
