‘800’ படத்தை கைவிடுமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வகையில், இயக்குனர் சேரன் இது பற்றி தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது; “உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட […]
