கனடா நாட்டின் சர்ரேயில் பிரபல இந்திய கனேடிய இயக்குனர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கனேடிய இயக்குனரான மணி அமர் கனடா நாட்டின் சர்ரேயில் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் வசித்த பகுதியில் அருகில் குடியிருப்பவர்களுக்கு இடையே நடந்த மோதலில் இவர் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பில் ஒரு நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமர், திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி, ஆசியாவை சேர்ந்த இளைஞர்கள் தீங்கிழைக்கும் குழுக்களோடு சேர்ந்து […]
