பாகிஸ்தான் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறாக குற்றம் சாட்டிய காரணத்தால் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராணுவம் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அரசாங்கத்தை எதிர்த்து குற்றம் சாட்டி வருகிறார். அதனோடு தொடர்ந்து மிகப்பெரிய பேரணிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். அதன்படி வாஜிராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று அரசாங்கத்திற்கு எதிராக பேரணி நடத்தப்பட்ட போது மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டார். இதில், காலில் அவருக்கு குண்டு பாய்ந்தது. […]
