கொரானா பாதிப்பினால் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதனை கட்டுப்படுத்த சரியான மருந்துகளை கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றனர். இந்த பாதிப்பினால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இந்நிலையில் அமெரிக்கா தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறையை கையில் எடுத்துள்ளது. அதாவது கொரானாவால் ஏற்கனவே குணம் அடைந்தவர்களின் பிளாஸ்மாவை எடுத்து தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் முறை தான் பிளாஸ்மா சிகிச்சை முறை எனப்படும். அதாவது கொரானாவின் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் […]
