ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 65-வது நினைவுநாள் நேற்று அனுசகரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், ஊர்பொதுமக்கள் என பலர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் மலர்வளையம் வைத்து இமானுவேல் சேகரனின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர். மேலும் பா.ஜ.க சார்பில் மாநில துணைத்தலைவா் நயினாா் […]
