இமாச்சல பிரதேசம் கங்க்ரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 8 பேர் படுகாயம் அடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்ரா மாவட்ட அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்ட தகவலில், இந்த நிலச்சரிவு காலை 9 மணிக்கு மாவு ஆலைக்கு கட்டுமான தளத்தில் ஏற்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். அதில் சஹதேவ்(21) மற்றும் அவரது சகோதரர் வாசுதேவ்(30), ராஜூகுமார்(19), கௌரவ்(20), தேவ் நாராயணன்(40) மற்றும் ஜகத்(42) […]
