இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 25 ஆண்டுகளில் மாநிலத்துடைய வளர்ச்சியின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை ஆட்சியில் தக்கவைக்க மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் மலைப்பகுதியில் விரைவான முன்னேற்றமும் நிலையான ஆட்சியும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். மண்டி மாவட்டத்திலுள்ள சுந்தர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” நவம்பர் 12-ஆம் தேதி […]
