தமிழகத்தில் அதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் மாறி மாறி தங்களை தாக்கி பேசி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அதிமுகவில் இணைய 1% கூட வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு பதிலளிக்கக்கூடிய விதமாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நாமக்கல் கூட்டத்தில் பழனிச்சாமி […]
