காவல்துறை தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து இபிஎஸ் உள்ளிட்ட 62 அதிமுக எம்எல்ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சட்டமன்றத்தில் ஜனநாயக் படுகொலை நடந்ததாக கூறி, திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் கண்டன முழக்கம் எழுப்பினர். அப்போது, இபிஎஸ் தரப்புக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, இபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
