தஞ்சாவூரில் வைத்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தாய்மொழி தமிழ் என்பதால் தாய்மொழி கல்வி அவசியமான ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்தது. தமிழக மக்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி ஏற்றுக் கொள்வார்களே தவிர திணிப்பை மட்டும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் இந்தி திணிப்பு மட்டும் தான். எனவே மத்திய அரசு இப்படிப்பட்ட விபரீதமான முயற்சிகளில் ஈடுபடாது. […]
