இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வால் அந்நாட்டில் உள்ள மக்கள் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை செல்போனில் தொடர்பு கொண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் உயிர் காக்கும் மருந்துகள், அரிசி, […]
