நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இன்று மட்டும் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 5986 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மட்டும் 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 5742 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் மட்டும் கொரோனாவில் இருந்து […]
