2009 ஆம் வருடம் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் நியமனம் செய்வதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதை மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஒவ்வொரு வருடமும் […]
