இளநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன. இந்தப் படிப்பில் சேருவதற்கு இன்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று தொடங்கி வரும் […]
