தனுஷ்கோடி நகரம் அழிந்து போன நீங்கா துயர சம்பவம் நடந்து இன்றுடன் 56 வருடங்கள் நிறைவடைந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இந்த நகரம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கையுடன் கடல் வாணிபம் செய்வதற்கு தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்திய பெருங்கடலும் , வங்க கடலும் சேரும் இடம் தனுஷ்கோடி கடல் ஆகும். இங்கு குளித்தால் காசியாத்திரை முடிவது என்பது ஐதிகம். தனுஷ் என்றால் […]
