ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் ராஜம் என்ற இடத்தில் ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வாய்ப்பு தேடுபவர்கள் எங்கே இடைவெளி இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். நீங்களே உங்களை தலைவராக நினைத்துக் கொள்ளுங்கள். வேறு ஒருவர் தலைவர் பதவியை எடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் என்ன உருவாக்குகிறீர்களோ அதுதான் நிஜம். அதன்பிறகு […]
