ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல இன்னல்களை சந்தித்து வரும் ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் பற்றிய சிறப்பு தொகுப்பு கொரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மனிதர்கள் படும் அவஸ்தையை விட குரங்குகள் அதிகமாகவே பட்டு வருகின்றன. மனிதர்கள் உணவு தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் ஊரடங்கினால் பசியால் மரணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நாகரீகம் வளர வளர காடுகள் நகரங்கள் ஆகின. மனிதர்கள் அத்யாவசிய தேவைக்காக காடுகளை அழிக்கத் தொடங்கினர். […]
