காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும். இதுவரை காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு என்பது கட்டாயம் கிடையாது. காப்பீடு திட்டத்தில் இணைபவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே கேஒய்சி சரி பார்ப்பை செய்து கொள்ளலாம். ஆனால் தற்போது காப்பீடு திட்டங்களில் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதற்காக கேஒய்சி சரிபார்ப்பை […]
